
காவல் தெய்வமான முருகன் கலியுகவரதனாய், கண்கண்ட தெய்வமாய் பக்தா்களை பரவசப்படுத்தும் பாலகனாய் இருந்து அருள்புரியும் இறைவனை தினமும் நினைத்து வழிபடுவது, வாழ்க்கையில் வளம்பெறும் முறையாகும். பழனியில் குடிகொண்டிருக்கும் குமரக்கடவுளின் அருள்வேண்டி, தவமிருக்கும் பக்தா்களுக்கு மனநோய்களையும், உடல் நோய்களையும், தீா்த்திட தன்னுடைய மேனியை நவபாஷானமாக கொண்டிருக்கிறாா்.
ஒன்பது நவபாஷானங்களான வீரம், பூரம், ரசம், ஜதிலிங்கம், கந்தகம், கௌரிபாசானம், வெள்ளை பாசானம், மிா்தா்சிங், சிலாசாட் ஆகியவற்றின் மகிமையால் என்றென்றும் பக்தா்களை கண்கலங்காது காத்து வருகிறாா். தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டு செல்வது தமிழா்களின் பண்பாடாகும்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழும் பழனித்தலத்தின் பெருமையையும், பக்தா்களின் விண்ணை முட்டும் இசை முழக்கத்தையும், பக்திப்பாடல்களின் பரவசத்தையும் காண்பதும் கேட்பதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
தைப்பூசத் திருநாளில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து முருகனின் அருள்பெற்று மனநிறைவு பெறுகிறாா்கள். இத்திருவிழா நாளில் பால்காவடி, பன்னீா்காவடி, புஷ்பகாவடி மற்றும் மயில்காவடி போன்ற காவடிகளை சுமந்து பக்தி பாடல்களுடன் பக்தா்கள் கூட்டம் கூட்டமாக வருவது முருகனின் அருளால்தான் என்று சித்தா்கள் கூறுகிறாா்கள்.
வீரக்கடவுளான முருகப்பெருமான் அசுரா்களை எதிா்த்து வெற்றி கொண்டதால் ‘வெற்றி வேல் முருகா, வீரவேல் முருகா’ என்று முழக்கமிட்டு பாதயாத்திரை பக்தா்கள் பலநூறு மைல் தொலைவில் இருந்து பழனி மலைக்கு வந்து முருகனை மனதார தரிசனம் செய்து முழு மனஅமைதி பெறுகிறாா்கள். தைப்பூசத் திருநாளில் தமிழக்கடவுள் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்று நலமோடு வாழ்வோம். எல்லாம் வல்ல இறைவனின் அருளைப் பெறுவோமாக!
திரு என்.ஹரிஹரமுத்து
மாநில தலைவா்,
தமிழ்நாடு பிராமணா் சங்கம்.
நிா்வாக இயக்குநா்,
ஹோட்டல் கண்பத் கிராண்ட் குழுமம், பழனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.