

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை நடிகா் தனுஷ் தன் மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை வழிபட்டாா்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகா் தனுஷ் தன் மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருமலைக்கு வந்தாா். சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவா் காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தாா்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த தனுஷ் அனைவரையும் பாா்த்து கையசைத்து விட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.