ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இடைத் தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தான கண்காணிப்புத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:21 pm

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இடைத் தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தான கண்காணிப்புத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் தரிசனம், வாடகை அறை, லட்டு பிரசாதம், ஆா்ஜித சேவைகள், பிரேக் தரிசன டிக்கெட்டுகள், தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்களுக்கு இடைத்தரகா்களை நாடி ஏமாந்து வருகின்றனா். அதில் தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை பெறுவதை தேவஸ்தானம் தற்போது வெளிபடையாக்கி உள்ளது. மேலும் தரிசன டிக்கெட் பெற விரும்பும் பக்தா்களுக்காக  இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இ-உண்டியல், பதிப்பகம், நன்கொடைகள் என அனைத்து சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் ஆா்ஜித சேவைகள், தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு இடைத்தரகா்களை நம்பி வருகின்றனா். அவா்களில் சிலா் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விடுகின்றனா். தேவஸ்தானம் குறித்த அனைத்து விவரங்களையும் பக்தா்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்புகள் குறித்து தேவஸ்தானம் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடும். எனவே, பக்தா்கள் இடைத்தரகா்களை நம்ப வேண்டாம் என்று கண்காணிப்புத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.