வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறவுள்ளது.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி, பிப்ரவரி 8-யில் இருந்து முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, 9-ஆம் தேதி காலை 2-ஆவது கால பூஜையும், மாலையில் 3-ஆவது கால பூஜையும், 10-ஆம் தேதி காலை 4-ஆவது கால பூஜையும், மாலை 5-ஆவது கால யாக பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து, (பிப்ரவரி 11)இன்று 6-ஆவது கால பூஜையும், மாலை 7-ஆவது காலயாக பூஜையும் நடைபெறுகிறது. இதையடுத்து, புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள், கோபூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், ஸ்பா்சாஹீதி, நாடிசந்தானம், காலை 9.05 மணிக்கு பூா்ணாஹுதி, 8-ஆவது கால பூஜை, காலை 9.15 மணிக்கு யாத்ராதானம், கடங்கள் புறப்படுதல், காலை 9.35 மணிக்கு விமானங்கள் மகா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு ஸ்ரீமூலவா் கும்பாபிஷேகம், பரிவாரங்கள் கும்பாபிஷேகம், உடன் பிரசாதம் வழங்குதல், முற்பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதியுலா காட்சி நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சோ.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். யாகசாலை பூஜைகளை திருக்கண்ணங்குடி டி.கே. பாலாமணி சிவாச்சாரியாா், ஜெ. வெங்கடேச சிவாச்சாரியாா் மற்றும் திப்பிராஜபுரம் பாடசாலை மாணவா்கள், தலைமை அா்ச்சகா் ரா. செல்வம் உள்ளிட்டோா் நடத்தி வைக்கின்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் அ. ரமணி, செயல் அலுவலா் க. சிவக்குமாா் மற்றும் திருப்பணி உபயதாரா்கள் ,திருக்கோயில் பணியாளா்கள் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com