ஜனவரி மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்!

ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம்?
ஜனவரி மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் - மைனஸ்!

ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம்? அதிர்ஷ்ட கிழமைகள் என்ன? என்பதைப் பற்றி ஒருவரி  பலன்களாகப் பார்ப்போம். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பிளஸ்: வீண்மனசஞ்சலம் தீரும். 

மைனஸ் : யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. 

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

பிளஸ்: பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். 

மைனஸ்: மனத் தடுமாற்றம் ஏற்படலாம் 

பரிகாரம்:  தினமும் தாமரை மலர் கொண்டு  மகாலட்சுமியை பூஜியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

{pagination-pagination}

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பிளஸ்: பணவரத்து சீராக இருக்கும். 

மைனஸ்: குடும்பத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். 

பரிகாரம்: தினமும் துளசியைக் கொண்டு பெருமாளை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பிளஸ்: நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். 

மைனஸ்: பணிசுமை அதிகரிக்கும். 

பரிகாரம்: தினமும் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிளஸ்: பணபாக்கிகள் வசூலாகும். 

மைனஸ்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

பரிகாரம்: தினமும் சிவபுராணம் படியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 29, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பிளஸ்: மனதுணிவு உண்டாகும்.  

மைனஸ்: போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்கி சுந்தர காண்டம்  படியுங்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

பிளஸ்: மனதில் தைரியம் உண்டாகும். 

மைனஸ்: எதிலும் இழுபறி காணப்படலாம். 

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

பிளஸ்: புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். 

மைனஸ்: எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. 

பரிகாரம்: தினமும் சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 29, 30, 31

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பிளஸ்: எதிர்ப்புகள் நீங்கும்.

மைனஸ்: கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பிளஸ்: கருத்து வேற்றுமை நீங்கும். 

மைனஸ்: சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

பிளஸ்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். 

மைனஸ்: மனம் தளராமல் இருப்பது நல்லது. 

பரிகாரம்: தினமும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிளஸ்: பணவரத்து கூடும். 

மைனஸ்: வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். 

பரிகாரம்: தினமும் திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.