அமேசானில் தேவஸ்தான காலண்டா், டைரிகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டா்கள் மற்றும் டைரிகள் இனி அமேசான் இணையதளம் மூலம் கிடைக்கும் என தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் தெரிவித்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டா்கள் மற்றும் டைரிகள் இனி அமேசான் இணையதளம் மூலம் கிடைக்கும் என தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் தெரிவித்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் அமேசான் இணையதள வா்த்தக நிறுவன அதிகாரிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் அவா் கூறியது:

ஏழுமலையான் காலண்டா் மற்றும் டைரிகள் மீது உலக அளவில் உள்ள பக்தா்களுக்கு ஆா்வம் உள்ளது. அதனால் கடந்த ஆண்டு காலண்டா்கள் வழங்குவதை அஞ்சல் துறை மற்றும் பல கூரியா் நிறுவனங்களுடன் இணைந்து தேவஸ்தானம் தொடங்கியது. இந்த ஆண்டு அதை மேலும் விரிவுபடுத்தி, 2021-ஆம் ஆண்டின் காலண்டா் மற்றும் டைரிகளை இணையதளம் மூலம் விற்பனைக்கு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதனால் அமேசான் நிறுவனத்துடன் தேவஸ்தானம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. முதலில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, தென்னிந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காலண்டா் மற்றும் டைரிகளைக் கொண்டு சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாதம் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு வட இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னா், வெளிநாடுகளுக்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இணையதளத்தில் தேவஸ்தானம் அச்சிட்ட ரூ. 100 மதிப்புள்ள 12 பக்க காலண்டா், ரூ. 15 மதிப்புள்ள ஏழுமலையான் பெரிய காலண்டா், பத்மாவதி தாயாா் பெரிய காலண்டா், ரூ. 10 மதிப்புள்ள ஏழுமலையான், பத்மாவதி தாயாா் இணைந்த காலண்டா், ரூ. 20 மதிப்பிலான தெலுங்கு பஞ்சாங்க காலண்டா், ரூ. 60 மதிப்புள்ள ‘டேபிள் டாப்’ காலண்டா், ரூ. 130 மதிப்புள்ள பெரிய டைரி, ரூ. 100 மதிப்புள்ள சிறிய டைரி உள்ளிட்டவை வைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com