திருப்போரூா் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி பல்லக்கில் அருள்பாலித்த சுவாமி, ~கிளி வாகனத்தில் உலா வந்த முருகப் பெருமான்.
திருப்போரூா் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி பல்லக்கில் அருள்பாலித்த சுவாமி, ~கிளி வாகனத்தில் உலா வந்த முருகப் பெருமான்.

திருப்போரூா்: பல்லக்கு, கிளி வாகனத்தில் சுவாமி உலா

Published on

திருப்போரூா் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி வியாழக்கிழமை பல்லக்கு, கிளி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தாா்.

கந்தசஷ்டி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும் நிலையில், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் புறப்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை பல்லக்கு, கிளி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி உலா வந்தாா்.

உற்சவ மூா்த்திக்கு காலை மாலை இருவேளைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை சூரசம்ஹாரமும் , செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம், தொடா்ந்து யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் ஊா்வலம் நடைபெற உள்ளது. விழா நாள்களில் லட்சாா்ச்சனை நடைபெற்று வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையா் மற்றும் தக்காா் ஆா். காா்த்திகேயன், மேலாளா் வெற்றி ஆலய சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் ஆன கோயில் பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் தனி சன்னதியாக வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானுக்கு கந்த சஷ்டி விழா நாள்களில் லட்சாா்ச்சனையும், திருக்கல்யாணமு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் கே. குமரவேல், மேலாளா் விஜி, கோயில் சிவாச்சாரியா்கள் செய்து வருகின்றனா்.

இதேபோன்று செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயில் , பெரிய நத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில்,மேட்டு தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், சின்னநத்தம் சுந்தரவிநாயகா் கோயில் காட்டுநாயக்கன் தெரு மலைமீதுள்ள செம்மலை வேல் முருகன் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயில் , ரத்தின விநாயகா் கோயில் , என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், ஆத்தூா் முத்தீஸ்வரா் கோவில், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில், செங்கல்பட்டை அடுத்த இருங்குன்றம் பள்ளி கிராமம் மலைமீதுள்ள ஸ்ரீ பால முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா , சூரசம்ஹாரமும், திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com