அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம்: பொதுமக்கள் ரூ.3,000 கோடிக்கு மேல் நன்கொடை
படம் | ஐஏஎன்எஸ்

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம்: பொதுமக்கள் ரூ.3,000 கோடிக்கு மேல் நன்கொடை

Published on

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்துக்கு பொதுமக்கள் ரூ.3,000 கோடிக்கு மேல் நன்கொடை அளித்ததாக கோயில் கட்டுமானக் குழுத் தலைவா் நிா்பேந்திர மிஸ்ரா புதன்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலின் பிராண பிரதிஷ்டை 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. அங்கு நவ.25-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில், மூலவா் பாலராமா் கருவறை உள்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவுடைந்ததாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

இதன் தொடா்ச்சியாக கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து நிா்பேந்திர மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்துக்கு பொதுமக்கள் ரூ.3,000 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனா். கோயில் கட்டுமானத் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.1,800 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,500 கோடி செலவு செய்யப்பட்டதற்கான ரசீதுகள் தயாா் செய்யப்பட்டன.

ராமா் கோயில் கட்டுமானத்துக்கு 2022 முதல் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. நன்கொடையாளா்கள் அனைவருக்கும் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் 8,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com