திருப்பாவை - விளக்கம்

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள அனைத்துப் பாசுரங்களிலும்
திருப்பாவை - விளக்கம்
Published on
Updated on
1 min read

முன்னுரை

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள அனைத்துப் பாசுரங்களிலும் மிகவும் அதிகமாக பிரபலம் ஆனது திருப்பாவை என்றால் மிகையாகாது. நாச்சியார் திருமொழி என்ற பெயரில் ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தொகுக்கப்பட்டு இருப்பதை அறியாத பலரும் திருப்பாவையின் ஆசிரியர் யார் என்று கேட்டால், உடனே ஆண்டாள் என்று பதில் சொல்லும் அளவுக்கு திருப்பாவை பிரபலம். சைவம், வைணவம் ஆகிய இரண்டு பிரிவினரும் அனுபவிக்கும் பாடல்கள் நிறைந்த தொகுப்பு திருப்பாவை.

ஆண்டாள் அருளியுள்ள முப்பது பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பல பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இன்று தொலைக்காட்சி பெட்டிகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக மாறிய பின்னர், ஏறக்குறைய எல்லா தமிழ் சேனல்களும், மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை ஒளிபரப்புகின்றன.

இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒரு நாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்து விடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம், திருப்பாவை ஆகும்.

பாவை நோன்பின் விளக்கம் -  இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com