உங்கள் நட்சத்திரத்துக்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

கருவறையில் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கின்றன. ஏன்?
உங்கள் நட்சத்திரத்துக்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

கருவறையில் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கின்றன. ஏன்?

அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனை நம்முடைய அன்பினால் அழைக்கிறோம். அவனை குளிர்விக்க நாம் செய்யும் சிறு அர்ப்பணிப்பு அது. பால் அபிஷேயம் என்றால் ஒரு அழைப்பு, இளநீர் அபிஷேகம், தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு. 

இறைவனிடத்தில் நாம் எவ்வாறு அன்பு செலுத்துகிறோம். சில நேரத்தில் தாயாக, தந்தையாக , சில சமயம் தோழனாக நேசிக்கிறோம். அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்துவிட்டு நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம். ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும் என்பது பக்திபூர்வமான பதில்.

அறிவியல் பூர்வமாக யோசித்துப் பார்க்கையில் தினமும் அபிஷேகம் செய்கையில் கோவிலின் சுற்றுப்புறத்திலுள்ள காற்று மண்டலம் குளிர்ச்சி அடையும். எதிர் மின்னோட்டம் அதிகரிக்கும். ஈரப்பதமும் எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கையில் இதயத்துடிப்பு சீராகும். ரத்த ஓட்டம் சீரைடையும். உடல் ஆரோக்கியத்துக்கும் ஆலய வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது கண்கூடாகிறது.

27 நட்சத்திரங்களில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப கோவிலில் அபிஷேகங்களை செய்து ஆலய வழிபாட்டை ஆன்ம வழிபாட்டாக மாற்றிக் கொள்ளுங்கள்.

1. அசுவினி – சுகந்த தைலம்

2. பரணி – மாவுப்பொடி

3. கார்த்திகை – நெல்லிப்பொடி

4. ரோகிணி – மஞ்சள்பொடி

5. மிருகசீரிடம் – திரவியப்பொடி

6. திருவாதிரை – பஞ்சகவ்யம்

7. புனர்பூசம் – பஞ்சாமிர்தம்

8. பூசம் – பலாமிர்தம் (மா, பலா, வாழை)

9. ஆயில்யம் – பால்

10. மகம் – தயிர்

11. பூரம் – நெய்

12. உத்திரம் – சர்க்கரை

13. அஸ்தம் – தேன்

14. சித்திரை – கரும்புச்சாறு

15. சுவாதி – பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

16. விசாகம் – இளநீர்

17. அனுஷம் – அன்னம்

18. கேட்டை – விபூதி

19. மூலம் – சந்தனம்

20. பூராடம் – வில்வம்

21. உத்திராடம் – தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

22. திருவோணம் – கொம்பு தீர்த்தம்

23. அவிட்டம் – சங்காபிஷேகம்

24. சதயம் – பன்னீர்

25. பூரட்டாதி – சொர்ணாபிஷேகம்

26. உத்திரட்டாதி – வெள்ளி

27. ரேவதி – ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com