பிரதோஷத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

சிவபக்தர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான குணம் என்னவென்றால் எப்படியாவது அடிக்கடி ஆலயத்துக்கு வந்து சிவனை தரிசனம் செய்து விடுவார்கள்.
nandhi bhagawan
nandhi bhagawan

சிவபக்தர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான குணம் என்னவென்றால் எப்படியாவது அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று சிவனை கண்குளிர மனம் நெகிழ தரிசனம் செய்து விடுவர். சிவனை நினைக்காமல் ஒரு பொழுதும் அவர்களால் இருக்க முடியாது, சிவ சிவ என்று மனத்துக்குள் சொல்லில் கொண்டே சிவ பக்தியில் தங்கள் கவலைகளை மறப்பார்கள். ஆழமான இறைபக்தி இருப்பின்,  மலை போல வந்த பிரச்னைகள் யாவும் பனி போல் கரைந்துவிடும் என்பதை பலர் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்துள்ளார்கள். 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பல பல நன்மைகளைப் பெறுவோம். சிவன் கோவிலில் நந்தி வழிபாடு என்பது தொன்றுதொட்டு நடந்து வருவது. அதுவும் பிரதோஷத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளைப் பார்க்கலாம்.

  • நந்தி தேவனுக்கு பாலில் அபிஷேகம் செய்தால் உடல்நலம் மேம்படும். நீண்ட ஆயுள் கிடைக்கும்
  • சந்தனத்தில் அபிஷேகம் செய்ய அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கும், அதிகாரமும் உள்ள பதவி கிடைக்கும்
  • மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடைப்பட்டு இருப்போருக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்
  • நந்திக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்ய கடன் தொல்லை நீங்கும். தீராத வியாதிகள் தீரும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்கும்
  • பன்னீர் அபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும். சஞ்சலமான மனம் அமைதியடையும். மகிழ்ச்சி பெறுகும். குடும்ப வாழ்க்கை சிறக்கும்.
  • இளநீர் அபிஷேகம் செய்தால் குடும்பப் பிரச்னையால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்கள் இழுவையில் இருந்த வழக்குகளில் வெற்றி பெறலாம்.
  • வாசனை திரவிய அபிஷேகத்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும்.
  • நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உயர்வான கல்வி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

நந்தியை வழிபட்டு சிவபெருமானின் அருளை அனுதினமும் பெறுவோம். ஓம் நமசிவாயா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com