களத்திர தோஷம் யாருக்கு தீங்கு செய்யும்? பரிகாரம் என்ன?

களத்திர தோஷம் தரக்கூடிய சில கிரக அமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்கத் தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் மாநில முதல்வர் யார் தெரியுமா?
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் மாநில முதல்வர் யார் தெரியுமா?

களத்திர தோஷம் தரக்கூடிய சில கிரக அமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்கத் தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

களத்திர ஸ்தானத்தில் (லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில்) பாவ கிரகங்கள் இருப்பது. (இயற்கை பாவர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு , கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் லக்கின பாவர்களான பாதகாதிபதி, அஷ்டமாதிபதி, மாரகாதிபதி இருப்பது.) களத்திர ஸ்தானத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பகை கிரகங்கள் (ஸ்தான அதிபதிக்கு) இருப்பது. களத்திர ஸ்தான அதிபதி கெடுவது.

1.  களத்திர ஸ்தான அதிபதி, ராகு / கேது உடன் நெருக்கமாக இருப்பது )

2. களத்திர ஸ்தான அதிபதி, நீச்சம், அஸ்தங்கம் அடைதல் .

களத்திர தோஷம் எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்? 

நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால், வினைகளாலும் இந்த தோஷம் வரக் காரணமாகிறது.

இந்த தோஷம்  (ஆண் / பெண் ) உள்ளவர்களுக்கு, திருமணம் தாமதமாகும்.

 சிலருக்கு, (ஆண் / பெண் ) திருமணமே நடைபெறாமல் போகவும் நேரிடும்.

திருமணம் (ஆண் / பெண் ) நடைபெற்றாலும், அடிக்கடி பிரச்சினைகள் தோன்றும் , கணவன் - மனைவி உறவுக்குள் ஒற்றுமை ஏற்படாது.

களத்திர தோஷம் நீங்க..

களத்திர காரகரான சுக்கிரனின் இருப்பிடமான ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் சேர்த்தி சேவையில் நேரிடையாகவோ, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியோ வரலாம். தடை நீங்கி திருமணம் விரைவில் நடந்தேறும்.

வீட்டில் சுமங்கலி பூஜை செய்து வர, திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

(சுமங்கலி பூஜை:  வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று, சுக்கிரனின் எண்ணிக்கையான 6 எண்ணிக்கையிலான சுமங்கலி பெண்களை வீட்டிற்கு / கோவிலுக்கு அழைத்து அவர்களுக்கு உடை, உணவு மற்றும் காணிக்கை, இம்மூன்றும் அளித்து அவர்களிடம் ஆசி பெற்றால், நிச்சயம்  இந்த தோஷம் விலகும். விரைவில் திருமணம் நடக்கும்.)

களத்திர தோஷ பரிகாரம்

குருவின் பலம் சேர்க்க, குரு பலம் / ஆதிக்கம்  மிக்க கோயில்களுக்குச் சென்று வந்தால், இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகவும், உடனடி குருவின் அருளால், குரு பலம் பெற்று திருமணம் நடக்கவும் செய்யும்.

கும்பகோணம் ஆடுதுறையில் அருகில் உள்ள, திருமணஞ்சேரி சென்று வணங்கி வந்தாலும் திருமணம் உடனடியாக நடந்தேறும்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை எனும் இடத்தில் கோவில் கொண்டிருக்கும், நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சென்று, இரு மாலைகளைக் கொண்டுசென்று கோவிலில் பெருமாளுக்கு ஒன்றை சார்த்தி பின்னர் ஒன்றை கைலியில் ஏந்தி 9 முறை பெருமாள் தாயாரை வலம் வந்து வணங்கி கும்பிட்டு வீட்டில் கொண்டு ஆணியில் மாட்டிவைத்தால், அதிகமான நாள்களாக 90 நாள்களுக்குள் திருமணம் நடந்தேறும். 

இது திண்ணம். திருமணம் ஆன பின்னர் கோவிலுக்கு மறுபடியும் இரு மாலை வாங்கி பெருமாளிடம் சமர்ப்பித்து தம்பதியர் அணிந்து கோவிலை வலம் வந்து, பழைய மாலையை, அங்கு கோவிலுக்குப் பின்புறம் உள்ள மரத்தடியில் உள்ள தொட்டியில் போட்டு வரவும். இதுவும் திருமணத்திற்கான சரியான பரிகாரமாகும். எண்ணற்ற திருமணம் கைகூடியதை அங்குச் சென்றாலே நாம் காணமுடியும். 

இதுபோல் பல்வேறு தோஷங்கள் உள்ளன. அந்த தோஷங்களைப் பற்றி அடுத்து ஒரு கட்டுரையில் காணலாம். தோஷ பரிகாரம் செய்வதால், உடனே அந்த தோஷம் விலகாது, மற்றும் ஜனன கால ஜாதகத்தில் தோஷத்தை ஏற்படுத்திய அந்த கிரக அமைப்புகள் மாறாது. ஜாதகர் தம்மை உணர்ந்து தமது குணங்களை, நடத்தைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றும் போது மட்டும் தான் சிறந்த பலன்களைப் பெறுவர்.

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com