புதுக்கோட்டை ஸ்ரீ சுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு

காலத்தால் முற்பட்ட காண்பதற்கரிய கற்கோயில்! அருள்சுரக்கும் ஈசனவன் முற்கால....
புதுக்கோட்டை ஸ்ரீ சுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு

காலத்தால் முற்பட்ட காண்பதற்கரிய கற்கோயில்! அருள்சுரக்கும் ஈசனவன் முற்கால சோழர்களால் கார்குறிச்சி திருக்கற்றளி பெருமானாக இருந்து திருக்கட்டளை ஈஸ்வரமுடையாராகி பிற்கால மதில் சுந்தரேஸ்வரராக நாமம் கொண்டருளுகிறார். ஆறிரண்டு கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, பல்லவ ஆட்சி கால பணிமுறையை பறைசாற்ற சப்தமாதர், ஜேஷ்டாதேவி அமைவாலும் அவர்கால சரித்திரம் பாடுகின்றன.

சோழர் படை பகைக்கொண்டு கடந்தபோது வந்தமர்ந்து இளைப்பாரி வாகைசூட வழிபட்ட காளியவள். சங்கப்பாடலாலும் போற்றப்படும் ஸ்ரீசுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளைக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாள்: 30.6.2017, நேரம்: காலை 9.15 -10 .15 மணி.

- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com