காயத்ரி ஜெபத்தின் முக்கியத்துவம்

மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்கி வாய்ந்த தலையாய மந்த்ரம். இந்த மந்திரம் குரு முகமாக உபநயனத்தின் சமயம் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் கிடைக்கப்பெறும் மந்திரம்.
காயத்ரி ஜெபத்தின் முக்கியத்துவம்
Updated on
1 min read

மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்கி வாய்ந்த தலையாய மந்த்ரம். இந்த மந்திரம் குரு முகமாக உபநயனத்தின் சமயம் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் கிடைக்கப்பெறும் மந்திரம்.

இந்த மந்திரம் மூன்று வேதத்தின் (ரிக், யஜுர், ஸாம) ஸாராம்சம் என்று கூறினால் அது மிகையாகாது. அதனாலேயே அதற்கு "திரிபாத காயத்ரி" என்று பெயர். காயத்ரி வேதத்திற்கு அன்னை ஆதலால் வேதமாதா என்று அழைக்கப்டுகிறாள். விடியலில் காயத்ரியாகவும், பகலில் சாவித்ரியாகவும், ஸாயத்தில் சரஸ்வதியாகவும் அழைக்கப்படுகிறாள்.

காயத்ரி மந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியர் விஸ்வாமித்ரர். ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல க்ஷத்திரியர். ஆனால்

இன்று மூன்று வேனைகளிலும் காலை, மதியம், மாலை சந்தியாவதனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம். இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும். அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்க வேண்டும்.

இதன் தமிழாக்கம்...அதாவது அர்த்தம்

யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன் என்பதே இதன் அர்த்தம்.

சூரியனுக்கு உள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரி மந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

இதனால் என்ன பலன்?

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு ஆத்மசுத்தி கிடைக்கும்.

இந்த மந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும் இருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிப்பது சிறந்ததாகும்.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.

எவர் ஒருவர் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருகின்றாறோ அவர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெருவது நிச்சயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com