
ஊத்துக்கோட்டையை அடுத்த ஒதப்பை கிராமத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை பௌர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், உற்சவர் அம்மன் குறத்தி வேடத்தில் குறி சொல்வது போன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர், அங்கு அம்மனை ஊஞ்சலில் வைத்து, சிறப்பு தாலாட்டு, பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
இதில், ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், பூண்டி, மைலாப்பூர், சீத்தஞ்சேரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம், வளையல், குங்குமம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.