ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதையொட்டி, கோயிலில் உள்ள கொடி மரங்கள், கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஞானபிரசுனாம்பிகை அம்மன் சந்நிதியில் முன் உள்ள அர்த்த மண்டபத்துக்கு தங்க முலாம் பூசும் செலவை ஏற்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கர்நாடக முன்னாள் அமைச்சர் காலி ஜனார்த்தன் ரெட்டியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அவர் அதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, திங்கள்கிழமை அவரது பிரதிநிதிகள் தங்க முலாம் பூசுவதற்குத் தேவைப்படும் 1.5 கிலோ தங்கத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தங்க முலாம் பூசும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர்.
கோயிலில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி முன் உள்ள கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசும் செலவை சித்தூர் எம்எல்ஏ சத்யபிரபா ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.