உஷார்... சித்திரா பெளர்ணமியான இன்று சித்திரகுப்தர் நம்மை அதிகம் கண்காணிப்பாராம்?

எமதர்மனின் உதவியாளரான சித்திர குப்த நாயனார் பூமியில் மக்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் இரவு, பகலாக அனுதினமும் கண்காணித்து அவரவர் நன்மை, தீமை கணக்குகளுக்கு ஏற்ப அவரவர் சொர்க்க, நரக விதிகளை எழுதிச் 
உஷார்... சித்திரா பெளர்ணமியான இன்று சித்திரகுப்தர் நம்மை அதிகம் கண்காணிப்பாராம்?

இன்று மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் மற்றும் எதிர் சேவை வைபவத் திருநாள் மட்டுமே கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. முன்னது தென் தமிழகத்தின் மாபெரும் விழா என்பதால் அனைவருக்கும் பரிச்சயமான விழாவாகி இருக்கிறது. அதைத் தவிர இன்று இன்னும் இரு விசயங்களுக்காகவும் இந்நாள் சிறப்புப் பெறுகிறது. அவை என்னவெனில் இன்று தான் புத்த பூர்ணிமா திருநாளும் கூட. இந்த பூமியில், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கபில வஸ்துவில் புத்தர் அவதரித்த திருநாள் இன்றே என பெளத்தர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவில் வட கிழக்கு மாநிலப் பகுதிகளில் இன்று சிறப்பாக பெளத்த வழிபாடுகள் நடைபெறும். பெளத்த மடாலயங்கள் தோறும் பிக்குகளின் சத்சங்கங்கள் களை கட்டும். கள்ளழகருக்காகவும், புத்தருக்காகவும் மட்டுமே நாம் இந்த நாளை சிறப்புறக் கொண்டாடினால் போதாது. ஏனெனில் இன்று தான் சித்திர குப்த நாயனார் பிறந்த தினமும் கூட என்பதால் இந்தியர்களான நாம் இதை முப்பெரும் விழாவாகவே கொண்டாடினாலும் தகுமே எனலாம். ஏனெனில் இந்து மத நம்பிக்கைகளில் ஊறிப் போனவர்களுக்கு சித்திர குப்த நாயனாரின் பெருமையும் விளங்கக் கூடும். 

எமதர்மனின் உதவியாளரான சித்திர குப்த நாயனார் பூமியில் மக்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் இரவு, பகலாக அனுதினமும் கண்காணித்து அவரவர் நன்மை, தீமை கணக்குகளுக்கு ஏற்ப அவரவர் சொர்க்க, நரக விதிகளை எழுதிச் செல்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. புராணக் குறிப்புகளின் படி சித்திர குப்த நாயனார் என்பவர் பிரம்மாவிலிருந்து நேரடியாகத் தோன்றியவர் எனவும், சூரியன், நீலா தேவிக்கு பிறந்த மைந்தன் எனவும் இரு வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இது தவிர யமதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவ, பார்வதி அருளால் சித்திரத்திலிருந்து, சித்திரா பெளர்ணமித் திருநாளில் உதித்த குமாரன் தான் சித்திர குப்தன் எனவும் சில கதைகள் உண்டு. வட நாட்டில் இப்போதும் சில பிராந்தியங்களில் சித்திர குப்தரின் வம்சாவளியினர் குறிப்பிட்ட மேலும் அவர் தமது கைகளில் ஏடும், எழுத்தாணியும் ஏந்தியவராகவே ஓவியங்களிலும், கோயில் சிற்பங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளார் என்பதால் அவரது ஜென்ம தினமான இன்று மாணவர்கள் அவரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. 

அது மட்டுமல்ல வழக்கத்தை விட இன்று மக்களாகிய நாம் நமது மனசாட்சிப் படி நடந்து சக உயிர்களுக்கு தீமை செய்யாமல் சித்திர குப்த நாயனாரை வழிபட்டால் நாம் இது வரை செய்த பாவங்கள் சற்றுக் குறைய வாய்ப்பு உண்டு என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், தேனி அருகே போடி செல்லும் வழியில் கோடங்கிபட்டி எனும் ஊரிலும் சித்திர குப்த நாயனாருக்கு தனிக்கோயில்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com