கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
பிறகு, தங்கள் குருசாமி மூலமாக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் கோயில் வளாகத்தில் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.