டிச.7 முதல் தேவஸ்தான நாள்காட்டிகளை ஆன்லைனில் பெற முன்பதிவுத் தொடக்கம்

டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேவஸ்தான நாள்காட்டிகளை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
டிச.7 முதல் தேவஸ்தான நாள்காட்டிகளை ஆன்லைனில் பெற முன்பதிவுத் தொடக்கம்

டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேவஸ்தான நாள்காட்டிகளை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலை அன்னமய்ய பவனில் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை செயல் அதிகாரி அனில்
குமார் சிங்காலிடம் தெரிவித்தனர். 
பின்னர் அவர் கூறியதாவது: டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேவஸ்தான நாள்காட்டி மற்றும் கையேடுகளை பெற பக்தர்கள் ஆன்லைன் மூலம் பெறும் சேவை தொடங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் நாள்காட்டி மற்றும் கையேடுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அவை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 
மேலும் ஃப்லிப் கார்ட் இணையதளம் மூலமும் பக்தர்கள் தேவஸ்தான நாள்காட்டி மற்றும் கையேடுகளைப் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
அஞ்சல் துறைக்கும், ஃப்லிப்கார்ட்க்கும் அதற்கான டெலிவரி கட்டணத்தை செலுத்தி அவற்றை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். 
தேவஸ்தான இணையதளமான ற்ற்க்ள்ங்ஸ்ஹர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம்- ல் தமிழ் மொழியில் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியிலும் சேவைகள் வெளியிடப்பட உள்ளன. திருமலை வாடகை அறைகள் வளாகத்தில் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க 1800425111111 என்ற டோல் ப்ரீ எண்ணை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 10-ஆம் தேதி தர்மதரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக திருமலையில் முக்கிய பகுதிகளில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க 107 கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
திருமலைக்கு பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில் ஏழுமலையானை 20,72,591 பக்தர்கள் தரிசித்தனர். 79,34,652 லட்டுகள் விற்பனையானது. 33,91,092 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 22,11,400 பேருக்கு சிற்றுண்டி, காபி, டீ, பால் வழங்கப்பட்டது. 8,87,968 பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 91.16 கோடி வருவாய் கிடைத்தது. 
இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏழுமலையானை 20,55,953 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 83,15,373 லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. 41,18,363 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 28,65,206 பேருக்கு சிற்றுண்டி, காபி, டீ, பால் வழங்கப்பட்டது. 8,68,866 பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 82.38 கோடி வருவாய் கிடைத்தது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com