
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது என்று தெரிந்துகொள்வோம்.
* கந்த புராணம் - இது ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து அனுபவிக்க வேண்டியது. கச்சியப்பரால் இயற்றப்பட்டது.
* திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.
* திருப்புகழ் - முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல் ஆகும்.
* கந்தர் அநுபூதி - அருணகிரிநாத சுவாமிகள் அருளியது கந்தர் அநுபூதி.
* கந்தசஷ்டி கவசம் - பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
* கந்த குரு கவசம் - ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கவசம் இது.
* வேல் விருத்தம் - முருகப் பெருமானின் கை வேலின் புகழ் கூறுவதை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியதாகும்.
* மயில் விருத்தம் - அருணகிரிநாதர் இயற்றியது இந்நூல்.
* ஷண்முக கவசம் - ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது.
* கந்தர் கலிவெண்பா - திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார்.
* கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.