மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விடையாற்றி உற்சவம் தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழா நிறைவடைந்த நிலையில் விடையாற்றி உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கி உள்ளன. 
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விடையாற்றி உற்சவம் தொடக்கம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழா நிறைவடைந்த நிலையில் விடையாற்றி உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கி உள்ளன. 

பங்குனி மாத விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அறுபத்து மூவர் விழாவுடன் மார்ச் 31-ம் தேதி கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டது. 

கடந்த பத்து நாட்களாக வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இறைவன். அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் விடையாற்றி விழா துவங்கியுள்ளது. இவ்விழாவில், உற்சவமூர்த்தி தினமும் எளிமையான அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து விடையாற்றி கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.  

ஏப்ரல் 4-ம் தேதியான இன்று திரு.சஞ்சய் சுப்ரமணியம் குழுவினர் பாட்டு மாலை 6.30 மணிக்கும், பேராசிரியர் தி.இராஜகோபால் பக்தி என்னதான் செய்யாது என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com