இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

திருவண்ணாமலையில் ஏப்.29-இல் சித்திரை பௌர்ணமி திருவிழா: 3,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை பௌர்ணமி திருவிழா வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 2:21 am IST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை பௌர்ணமி திருவிழா வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவுக்காக 3,500 சிறப்புப் பேருந்துகளை 8,600 நடைகள் இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
குறிப்பாக, சித்திரை மாதம் வரும் பௌர்ணமி பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்திரை பௌர்ணமி திருவிழாவுக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவர்.
நிகழாண்டுக்கான சித்திரை பௌர்ணமி திருவிழா வரும் 29-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி, 30-ஆம் தேதி காலை 6.54 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆய்வுக் கூட்டம்: இந்த நிலையில், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழாவையொட்டி, பல்வேறு துறைகள் சார்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கோயில் நிர்வாகம், நகராட்சி, ஊராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.
கூட்டத்தில், திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
25 இடங்களில் தாற்காலிக கார் நிறுத்த வசதி, 50 இடங்களில் தாற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள், 20 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்ய வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் அபயமண்டபம், காமாராஜர் சாலை, திருவள்ளுவர் சிலை, பெரியார் சிலை, பழைய அரசு பொது மருத்துவமனை உள்பட 15 இடங்களில் 108 அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
15 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளையும் பராமரிக்கும் பணி செய்ய வேண்டும்.
3,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களுக்கு 3,500 சிறப்புப் பேருந்துகளை 8,600 நடைகள் இயக்க வேண்டும். வரும் 29, 30-ஆம் தேதிகளில் தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும்.
9 தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதையை இணைக்கும் வகையில் இலவசப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் எஸ்.மோகனசுந்தரம், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு, வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.