கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொடியேற்றம்

நெல்லை மாவட்டம், பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On :6 ஏப்ரல் 2018, 12:33 am IST

நெல்லை மாவட்டம், பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இத்திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
9-ஆம் திருநாளான ஏப். 13-ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி பகல் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவத்தைத் தொடர்ந்து, இரவு 1 மணிக்கு சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தல் முதலியவை நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர் கிருஷ்ணகாந்தன், சிவராஜ், இந்து முன்னணி மாவட்டச் செயலர் பால்மாரியப்பன், பாபநாசம் கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் ரா. நடராஜன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யசீலன், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.