இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் தேய்பிறை அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்!

பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்வது தேய்பிறை எனப்படும். 
இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் தேய்பிறை அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்!
Published on
Updated on
1 min read

பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்வது தேய்பிறை எனப்படும். 

முதல் நாள் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும். இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன.

எந்த ராசிக்கு தேய்பிறை அதிர்ஷ்டத்தைத் தரும்? 

பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும். ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் தேய்பிறை காலம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்தக் காலங்களில் செய்யும் எந்தக் காரியமும் இவர்களுக்கு வெற்றியைத் தரும். 

சந்திரன் தேய தேய இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாம். வளர்பிறை இவர்களுக்கு அவ்வளவாகக் கைகொடுக்காது. 

குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், மேற்படிப்பு தொடங்குதல், நிச்சயம் செய்தல், வீடு வாங்குதல், மனை வாங்குதல், வீட்டு கிரகப்பிரவேசம் செய்தல் என எந்தக் காரியத்தை தொடங்கினாலும் அந்தக்காரியம் ஜெயமாகும். 

அவ்வளவு ஏன் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் தேய்பிறையில் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்வு சீரும் சிறப்புமாக அமையும் என்று ஜோதிடம் சாஸ்திரம் உறுதியாகக் கூறுகிறது. 

ஆகவே, இந்த நான்கு ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறையில் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்குத் தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com