ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2)

பதினெண் சித்தர்களில் ஒருவரும், 63 நாயன்மார்களுள் ஒருவரும்....
ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2)

பதினெண் சித்தர்களில் முதல் பகுதியில் ஆறு சித்தர்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அடுத்த ஆறு சித்தர்களைப் பற்றி தற்போது காண்போம். 

திருமூலர் தரிசனம் அடுத்துப் பெறலாம். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவரும், 63 நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி. நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம். 3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு திருமூலர் உரை எழுதியுள்ளார். அது கிடைக்கவில்லை. இந்த 3000 மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை. இப்போது நம்வசம் இருக்கும் திருமந்திரம் பல இடைக்குச்செருகல்களுடன் கலந்து கிடக்கின்றது எனவும் சிலர் சொல்கிறார்கள்.
  


அடுத்து "பாம்பாட்டி சித்தர்" தரிசனம். இவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளைக் கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதைப் பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.
 

பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடு பாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து "கோரக்கர்" ஐயாவிடம் சென்று அருள் பெறலாம்.

பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப்பிரிவின் நிறுவனரும் ஆவார். இவரை வடநாட்டில் "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11-ம் 12-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது.

சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட முகலாயர் ஆதிக்கத்தை வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.


அடுத்து "போகர்" பெருமானிடம் சென்று அருள் பெறலாம். பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
 

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச்சிலை நவபாஷாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாஷாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. நவபாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாஷாணம் மருத்துவக் குணமுள்ளது.
 


"ராம தேவர்" தரிசனம் அடுத்துப் பெறலாம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர் பகவான் ராம தேவர் சித்தர் ஆவார். மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மேல் மலையேற்றமாகச் சென்றால் பகவான் ராம தேவர் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. பழமுதிர்சோலை அடுத்து ராக்காயி தீர்த்தத்திற்குச் செல்வோம். இதுவரை மட்டுமே பொதுவாக மக்கள் செல்வார்கள். ராக்காயி தீர்த்தம் அடுத்து மேலே சென்றால் வனப்பகுதியில் செல்லலாம். 2 கி.மீ பயணித்தால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் சமாதி காணலாம்.

குறுகலான மலைப்பாதை வழியாகச் சென்றால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள இடத்தை அடையலாம். அவ்விடம் குளுமையாக இருக்கும். தியானம் செய்ய உகந்த இடம் ஆகும். மலையேற்றம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தரும். மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனிதக் குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.


தன்வந்திரி -  நீங்களும் தரிசித்துக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com