நண்பேன்டா.. உங்கள் ராசிக்கு எந்த ராசிக்காரர் நட்பாக இருப்பார்கள்? ஜோதிடம் கூறும் உண்மை!

வருடாவருடம் ஆகஸ்ட் முதல் ஞாயிறுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
நண்பேன்டா.. உங்கள் ராசிக்கு எந்த ராசிக்காரர் நட்பாக இருப்பார்கள்? ஜோதிடம் கூறும் உண்மை!

வருடாவருடம் ஆகஸ்ட் முதல் ஞாயிறுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஜோதிடத்தில் நண்பர்கள் தினத்தை பற்றியும், ஒவ்வொரு ராசிக்கும் நண்பர்கள் எப்படி இருப்பார்கள், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நட்பின் முக்கியத்துவம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். 

பொதுவாக நட்புக்கு ஏற்றக் கிரகம் என்றால் அது சுக்கிரன் தான். ஏன் சுக்கிரனை சொல்வார்கள் என்றால் ஒவ்வொரு கிரகத்துக்கும் உச்சவீடு, அதாவது 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு பாவத்துக்கும் சித்தர்கள் பழமொழி போன்று ஒருவரி பலன்களை சொல்லி இருக்கிறார்கள். 

அதில், மீன ராசிக்குச் சொல்லியிருக்கக்கூடிய பலாபலன் "விடல் விடேல் வினாத்தான் நட்பை விடல்" என்று மீன ராசிக்கு மட்டும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். மீனா ராசியில் உச்சமாகக்கூடிய கிரகம் சுக்கிரன். அதனால் தான் மீன ராசிக்காரர்கள் சொந்த விஷயத்தைத் தவிர, பொதுநலத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள். எல்லாக் கிரகங்களுக்கும் நட்பின் காரகம் இருந்தாலும், நட்பிற்கு அதிக முக்கியத்துவம் சுக்கிரனுக்கு தான் இருக்கிறது. 

பொதுவாக ஒவ்வொரு ராசியும் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் வைத்துத் தான் பலன் கணக்கிடப்படுகிறது. மேஷ ராசிக்குரிய நட்பு தொடர்பான கிரகம் சுக்கிரன். ஏழாம் வீட்டு அதிபதி அல்லது பவாத்தைக் கொண்டு நட்பின் வலிமையைக் கணக்கிடப்படும். 

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிகளும் பஞ்சபூத அடிப்படையில் நெருப்பு ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளும் நீர் ராசிகள் என்பதால் இவர்களிடையே அன்யோன்யம் ஏற்படும். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காற்று ராசிகள் என்பதால் இவர்களிடையே நட்பு வட்டாரம் நன்றாக இருக்கும். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளும் நிலம் ராசிகள் என்பதால் ஒருவருக்கொருவர் நட்பு அடிப்படையில் அன்யோன்யம் அதிகரிக்கும். இது பொதுவான பலன்கள் ஆகும். 

12 ராசிக்காரர்களுக்குமான நட்பு ராசிகள்

மேஷம் - சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களிடம் மிகுந்த நட்பு, அன்யோன்யம் கட்டாய முறையில் இருக்கும்.

ரிஷபம் - கன்னி, மகரம் ஆகிய ராசிகள் நட்புடன் இருப்பார்கள். 

மிதுனம் - கன்னி, தனுசு, மீனம் நான்கு ராசிக்காரர்களும் நீண்ட காலம் நட்புடன் இருப்பார்கள். மற்ற எட்டு ராசிகளை விட இந்த நான்கு ராசிகள் விட்டுக்கொடுப்பதில் சிறந்தவர்கள். 

கடகம் - மகரம், விருச்சிகம் அன்யோன்யமாக இருப்பார்கள். 

சிம்மம் - மேஷம், தனுசு, இவர்களின் நட்பு நீண்ட காலம் தொடரும். 

கன்னி - மகரம், ரிஷபம் மீனம் ஆகிய 3 ராசிகளுடன் நட்பாக இருப்பார்கள். 

துலாம் - விருச்சிகம், மேஷம், கும்பம் ஆகிய ராசிகளுடன் அன்யோன்யமாக பழகுவார்கள். 

விருச்சிகம் - ரிஷபம், மீனம், கடகம் ஆகிய 3 ராசிகளுடன் நட்புடன் இருப்பார்கள். 

தனுசு - மேஷம், சிம்மம், ரிஷபம் ஆகிய மூன்று ராசிகளுடன் நட்பு வட்டாரம் நன்றாக இருக்கும். 

மகரம் - கடகம், ரிஷபம், கன்னி ஆகிய 3 ராசிகளிடம் அன்பாகவும், நட்பாகவும் பழகுவார்கள். 

கும்பம் - சிம்மம், மிதுனம், துலாம் ஆகிய மூன்று ராசிகளிடத்தில் நட்பு அன்யோன்யமாக இருக்கும். 

மீனம் - பதினொரு ராசிக்காரர்களுடனும் நட்பாக இருப்பார்கள். ரிஷபம், கடகம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிகளுடன் அன்யோன்யமாக பழகுவார்கள். 

ஜாதகத்தில் பொதுவாக சுக்கிரன் லக்னத்தில் 6, 8, 12 மறைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு நீண்ட கால நட்பு என்பது ஒருபோதும் நீடிக்காது என்பது ஜோதிடக் கூற்றாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com