தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்

ராமா ஜென்மபூமி நிர்மான் நியாஸ் சார்பில் தாய்லாந்து நாட்டில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவங்கியுள்ளது. 
தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்

லக்னோ: ராமா ஜென்மபூமி நிர்மான் நியாஸ் சார்பில் தாய்லாந்து நாட்டில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவங்கியுள்ளது. 

இதுகுறித்து ராமஜென்ம பூமி அமைப்பினர் சார்பில் கூறியதாவது: 

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் அயுத்தயா என்ற இடத்தில் ராமர் கோயில் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பூமி பூஜை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் விரைவில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்படும் ராமஜென்ம பூமி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், கோயில் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ராமஜென்ம பூமியின் தலைவர் மஹாந் ஜென்மஜெய் சரண் தெரிவித்துள்ளார். 

விரைவில் ராமர் கோயில் கட்டடம் அமைப்பது தொடர்பான நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்படும் 

மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்து மத கடவுளான ராமர் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கோயில் பெரும் உதவிக்கரமாகவும், நல்ல வாய்ப்பாக அமையும். பிரம்மாண்ட முறையில் கட்டப்பட உள்ள இந்தக் கோயில் போன்றே விரைவில் அயோத்தியிலும் ராமர் கோயில் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாங்காங் அருகே சாயோ பிரயா ஆற்றின் கரையில் இந்த ராமர் கோயில் கட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com