தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும், உலகப் புகழ்பெற்ற மகாமகத் பெருவிழாவின் பிரதான திருக்கோயிலாகவும் விளங்கக்கூடிய, ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், இப்பகுதியிலுள்ள சிவாலய ஸ்ரீநடராஜ பெருமான் சந்திப்பு நடைப்பெற்றது.
இவ்விழாவில், கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர், கௌதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் [காளியம்மன் ], காளகஸ்தீஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இரவு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனமும் நடைப்பெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு நடராஜப் பெருமான் கீழரத வீதியில் கிழக்கு நோக்கி எழுந்தருள, கும்பகோணத்திலுள்ள மகாமகம் விழாவில் தொடர்புடைய இதர சிவாலய ஸ்ரீநடராஜ மூர்த்திகள் இரட்டை வீதியாக வலம் வந்து ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடராஜ பெருமானுடன் சந்திப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்வருடம் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இப்பகுதியிலுள்ள சிவாலயங்களின் ஸ்ரீநடராஜ மூர்த்தங்கள் அனைத்தையும் ஏககாலத்தில் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் திருக்கோயில்களின் நிர்வாகிகள் முயற்சியினாலும் மற்றும் ஸ்ரீமந்திரபீடேஸ்வரி பக்தர்கள் சார்பிலும் இவ்விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்பது கூறிப்பிடதக்கது.
படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



