/
ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. உற்சவருக்கு கவசம் அணிவித்தல், கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், திருத்தேர் அலங்காரம், கலச ஊர்வலம், அம்மன் அழைப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருத்தேர் வீதி உலா புதன்கிழமை (டிச.26) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








