திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருக்கழுகுன்றத்தில் வேதமலையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, புதன்கிழமை சங்குதீர்த்தக்
குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. புதன்கிழமை சந்திரகிரகணம் என்பதால் மாலை 7 மணிக்கு நடைபெற வேண்டிய தெப்பல் உற்சவமானது, கிரகணம் முடிந்து, பரிகாரம் செய்யப்பட்ட பின்னர், இரவு நடைபெற்றது. இதில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக - அலங்காரம் மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், தெப்பத்தில் உற்சவ மூர்த்திகளான சிவன்- பார்வதி அலங்காரத்தில் சுவாமி வைக்கப்பட்டு, தெப்பல் திருவிழா இரவு 11 மணியளவில் நடைபெற்றது .
இதில் திரளான பக்தர்கள் குளத்தில் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தெப்பல் உற்சவம் நிறைவடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஆ.குமரன், தக்கார் மற்றும் செயல் அலுவலர் நற்சோணை, மேலாளர் விஜி, கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.