
நாகூர் ஆண்டவர் தர்காவின் 461 -ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவின் 461-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப். 17-ஆம் தேதி புனித கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நாகையில் தொடங்கி, செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகூர் தர்காவின் அலங்கார வாசலை அடைந்தது.
பின்னர், பாரம்பரிய முறைப்படியான சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நாகூர் தர்காவின் பரம்பரை தர்கா கலிபா எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் பங்கேற்றனர். சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழாவையொட்டி, நாகூர் பகுதி விழாக்கோலம் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.