
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழுத்தலைவர் சுதாகர் யாதவ் கூறியதாவது,
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளனது.
காலை 11.30 மணி முதல் 12 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையிலும் ஆரத்தி, தீர்த்தம், சடாரி அளித்து பிரேக் தரிசனம் வழங்கப்பட உள்ளது.
இதற்குக் கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.