சேலத்தில் நடைபெறும் செருப்படித்திருவிழா: எந்தெந்த கோயில்களில் என்னென்ன சிறப்பு? 

ஆடி மாதம் அம்மன் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திருமணமான பெண்களும், திருமணத்துக்குக்...
சேலத்தில் நடைபெறும் செருப்படித்திருவிழா: எந்தெந்த கோயில்களில் என்னென்ன சிறப்பு? 

ஆடி மாதம் அம்மன் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திருமணமான பெண்களும், திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களும் அந்த மாதம் முழுவதும் அம்பாளை நினைத்துப் பூஜித்தால், வளங்கள் பல பெருகும் என்பது ஐதீகம். 

ஆடி மாதம் பிற திருக்கோயில்களில் எப்படியெல்லாம் வழிபாடு நடத்தப்படுகிறது என்று பார்ப்போம். 

• திருச்சி அருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். 

• திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பானது ஆகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. ஆனி முற்சாரல், ஆடி அடை சாரல் என்பது பழமொழி. 

• மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் எனும் அங்கயற் கண்ணி ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா பத்து நாட்கள் மிகச்சிறப்புடன் நடைபெறும். 

• சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப்பெருவிழா அற்புதவிழா. ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. சேலம் அன்னதானப்பட்டியில் ஆடிப்பெருவிழாவின் பொங்கல் படையல். அடுத்த நாள் குகை வண்டி வேடிக்கை. ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒரு நாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித்திருவிழா நடைபெறும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், வேப்பிலை வைத்துப் பூசாரிடம் தர, அவர் அதைப் பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவி விடுவார். இது தான் செருப்படித் திருவிழா. 

• திருநின்ற ஊரில் நாகேசுவரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாளில் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவர். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலும் இது போல் செய்வர். ஆடி மாதம் கஞ்சிக்கலயம் சுமந்து அங்கே கஞ்சி வார்த்தல் சிறப்பான விழா. 

• உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவதற்கு சேத்து முட்டி விழா என்று பெயர். அடுத்தவிழா சத்தாபரண விழா, இப்படிப்பலவிழாக்கள். அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆடியில் பாடை கட்டித்திருவிழா நடைபெறும். செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் ஆடித்திருவிழாவில் அவரவர் நகைகளையெல்லாம் அம்மனுக்குப் போட்டு அழகு பார்ப்பர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com