கஷ்டப்பட்டு உழைத்தும் பலனில்லையா? அதற்குக் காரணம் இதுதான்!!

மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். ஆனால், வெற்றியை எட்டும் தருவாயில் அந்தக் காரியம் ஏதாவது காரணங்களால் தடைப்பட்டு விடுகின்றது.
கஷ்டப்பட்டு உழைத்தும் பலனில்லையா? அதற்குக் காரணம் இதுதான்!!
Updated on
2 min read

மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். ஆனால், வெற்றியை எட்டும் தருவாயில் அந்தக் காரியம் ஏதாவது காரணங்களால் தடைப்பட்டு விடுகின்றது. நன்கு சம்பாதிக்கிறேன் ஆனால் கையில் காசு நிற்பதில்லை கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. 

ரியல் எஸ்டேட், கமிஷன், வியாபாரிகள் போன்ற துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் இவ்வாறு அதிகம் புலம்புவதுண்டு. முன்னேற்றம் உயர்ந்த நிலையை அடையும் போது கடைசியில் தடங்கல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? 

இதற்கு முக்கியக் காரணம், ஜாதகருக்கு ஜாதகத்தில் ஏற்படும் சகடை தோஷம் தான். ஜாதகத்தில் சந்திரன் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து ஒவ்வொருவரின் பிறந்த நேரத்திலும் ராசியிலும் 6, 8, 12-ம் வீட்டில் குரு அமர்ந்திருந்தால் இந்த தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்திற்கு சகடை தோஷம் என்பர். 

ஜாதகருக்கு இந்த தோஷம் அமைந்துவிட்டால் அவரிடம் தெளிந்த மனமும், உறுதியான மனோ பலம் நிச்சயம் இருக்காது. எளிதில் புகழ்ச்சிக்கும் தேவையில்லாத விஷயத்திற்கும் மனதைச் செலுத்துவர். மனம் எப்போதும் அமைதி இழந்து, ஏதாவது ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டே இருக்கும். அலைபாயும் சிந்தனைகள் கொண்டவராக எப்போதும் இருப்பர். 

மதியோ நின்ற இடம் தன்னில் 
அந்தனன் 6, 8, 12-ல் அமர்ந்துவிட்டால் 
சகடை என்று சூளுரை
அந்த ஜாதகனுக்கோ சாதகம் 
முன்னேற்றத்திலும் சீருடன் இரவே இராது 
என்று நீ சொல்வாயாக...

இது ஒரு பாடல்....சந்திரன் என்பது மதி (நிலவு) குரு என்பது யானை. யானைக்கும் நிலவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? ஜாதகத்தில் சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு அமர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படுமாம்.  

எப்போதும் குழப்ப மனநிலை, உயர்ந்த நிலையை அடைய முடியாத சூழ்நிலை. செல்வந்தர்களாக இருந்தாலும், மனஅமைதி இல்லாமை. ஒரு சிலர் அரசாங்க பதவியில் இருந்தாலும், உயர் பதவி கிடைக்காத நிலை. இவர்கள் எந்த முயற்சியை எடுத்தாலும், எவ்வளவு உயர்ந்த சிந்தனையில் இருந்தாலும் குழப்பத்திலும், கடைசியில் தடங்களுமே இவர்களுக்கு மிஞ்சும். 

இத்தோஷம் உள்ளவர்கள் நிறைய திறமை, அனுபவம், நல்ல புத்திசாலித்தனம் பெற்றிருப்பார்கள். ஆனால், நிலையான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாது. வண்டிச் சக்கரம் உருளுவது போல மேலும் கீழும் வாழ்வு உருளும். ஒரு கால கட்டத்தில் ஓஹோ என்று இருக்கும் இவர்கள், அடுத்த காலக்கட்டத்தில் அந்த நிலை திடீரென மாறி சரிவு ஏற்படும். காடாறு மாதம், நாடாறு மாதம் கதை தான் இவர்களுக்கு உண்டாகும். 

இந்த சகடை தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தால் இதில் இருந்து தப்பிக்க முடியும்? 

• ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி யந்திரம் வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம்.

• முருகன், பிரகஸ்பதியை ஆலயம் சென்று வணங்கி வரலாம். பௌர்ணமி நிலவை தரிசிக்கலாம். 

• யானை முடியில் மோதிரம், காப்பு போன்றவற்றை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து கைகளில் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அணிவதால் சகட தோஷம் நீங்கி, கஜகேசரி யோகம் சித்திக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. நிலையான வாழ்வும் அமைதியான சிந்தனையும் உண்டாகி உயரப் பெறுவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com