
திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் ஆலய பூச்சொரிதல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் ஆலத்தில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டுக்கான ஆலய பூச்சொரிதல் இன்று நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பின்னர் அந்தப் பூக்களை அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனுக்குக் காணிக்கையாக பூக்களைச் செலுத்தி வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.