தொழிலில் சிறந்து விளங்க செய்யவேண்டிய ஹஸ்த்ர வழிபாடு!

தொழிலில் நிரந்தரமாக கால் பதிக்க விரும்புபவர்களும், வீழ்ச்சியடையாத நிலையே எட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தொழிலில் சிறந்து விளங்க செய்யவேண்டிய ஹஸ்த்ர வழிபாடு!
Published on
Updated on
2 min read

தொழிலில் நிரந்தரமாக கால் பதிக்க விரும்புபவர்களும், வீழ்ச்சியடையாத நிலையே எட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தொழிலில் வெற்றி பெற்று, மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவதற்கான வழிமுறையை தான் இன்று காணப்போகிறோம்.

அந்த வழிபாடு தான் ஹஸ்த்ர வழிபாடு. ஹஸ்த்ர வழிபாடு என்றால் என்னவென்றால்? பெருமாள் கையில் இருக்கக்கூடிய சங்கு, சக்கரமாகும்.  இதை அபய ஹஸ்த்ரம் என்று கூறுகிறோம். 

பகவான் விஷ்ணுவின் கையில் இருக்கும் சங்கு சக்கரத்திற்கு அவ்வளவு விஷேசங்களும், மகத்துவமும் வாய்ந்தது. மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவது.  உன்னதமான பலன்களை அள்ளித்தருவது. 

சக்கரத்தை எப்படி உருவாக்குவது? 

சங்கு, சுதர்ஸன சக்கர யந்திரம் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் சங்கு முழுவதும் சில்லறை காசுகளால் நிரப்ப வேண்டும், பின்னர், சுதர்ஸன யந்திரத்தின் மீதும் சில்லறையை வைத்துவிட்டு இந்த மந்திர ஜெபத்தைச் சொல்ல வேண்டும்...

ஸுதர்சனர் மந்திரம்

ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய 

கோவிந்தாய, கோபி ஜன வல்லபாய, 

பராய, பரம ப்ருஷாய, பரமாத்மனே, 

பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஔஷத

அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர,

ம்ருத்யோர் மோசய, மோசய,

ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய,

ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே, ஜ்வாலா

பரீதாய, ஸர்வதிக் ஷோபன ஹராய, 

ஹும்பட், பரப்ரஹ்மணே, 

பரம்ஜ்யோதிஷே, ஸ்வாஹா

என்ற சுதர்ஸன மூலமந்திரத்தை ஜெபித்துவிட்டு..

ஓம் சுதர்ஸனாய நமக..

ஓம் மஹாவிஷ்னுவே நமக..

ஓம் மஹாலட்சுமியை நமக..

ஓம் மஹாலட்சுமியை நமக..

இவ்வாறு தினம் தினம் சங்கிற்கும், சுதர்ஸன சக்கரத்திற்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் பூஜை செய்துவர பல உன்னதமான பலன்களை கொடுக்கும். பூஜை செய்த சங்கையும், சுதர்ஸன சக்கரத்தையும் எடுத்து தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம் அல்லது நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு செய்துவர தொழிலில் வெற்றிவாகை சூடலாம். 

சங்கு என்றால் எந்த சங்கை வைக்கலாம்?

வலம்புரி சங்கு மகத்துவம் வாய்ந்தது. சங்கின் நுணி வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும். சங்கு முழுவதும் சில்லரை காசுகளை நிரப்ப வேண்டும். பக்கத்தில் சுதர்ஸன யந்திரத்தையும் வைத்து அதன்மேல் சில்லரை காசுகளை வைக்க வேண்டும். இரண்டையும் ஒரே தட்டில் வைப்பது நல்லது. அதன் மேல் குங்குமத்தால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். அந்தக் குங்குமத்தை தினமும் நெற்றியில் ஈட்டுக்கொள்ளலாம். 

இவ்வாறு தினமும் சங்கு, சக்கரத்தை வைத்து பூஜித்து ஆராதனை செய்துவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். தொழிலில் வீழ்ச்சியில்லாத மிகப்பெரிய சாம்ராஜியத்தை அடைய முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com