கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் 

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:33 pm

DIN

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 

மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெறும். 

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுவாமி இறங்குவதற்கு வசதியாக உருளை குழாய்கள் அமைத்து சாய்வு தளம் அமைத்தல் பணி, தண்ணீர் நிரப்புவதற்கான தொட்டி அமைத்தல் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கமிஷனர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.