தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைக்க ஜோதிட ரீதியாக வழி உள்ளதா?

இன்று நாம் காணப்போகும் விஷயம் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் திருடு(களவு) போகும் பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதா?
தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைக்க ஜோதிட ரீதியாக வழி உள்ளதா?

இன்று நாம் காணப்போகும் விஷயம் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் திருடு(களவு) போகும் பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதா? என்பதைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம். 

இழப்பு என்பது மிகவும் கொடுமையான விஷயம். நாம் ஒவ்வொரு பொருளையும் கடினமாக உழைத்து குருவி சேர்ப்பதைப் போன்று சிறுகச் சிறுக சேர்த்து வைப்போம். ஆனால், அது ஒரு நாள் மொத்தமாக நம்மை விட்டுச் சென்று விடும் போது அந்த இழப்பை எவராலும் ஈடுகட்டவே முடியாது. இழப்பு ரொம்ப கொடுமையான விஷயம். இழப்பின் வலி, தரும் வேதனை ஆறுதல் மொழிகளால் அடங்குவதில்லை. 

ஜோதிட ரீதியாகத் திருட்டு குணம் யாரிடம் இருக்கும்? என்று பார்ப்போம். 

ஒருவரது ஜாதக ரீதியாக லக்னம் என்பது உடம்பைப் பற்றிக் கூறும் இடம். 5-ம் இடம் என்பது புத்தி ஸ்தானம் எனப்படும் நமது புத்தியின் செயல்பாட்டை விவரிக்கும் இடம். 6-ம் இடம் திருட்டைப் பற்றிக் கூறும் இடம்.

லக்ன கேந்திரத்தில் சனிபகவான் இருந்தாலோ, 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் தனித்தோ அல்லது புதன் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ, 5-ம் இடமான புத்திஸ்தானத்தில் சனி பகவான், சந்திரன், புதன், கேது இருந்தாலோ, சனி, சந்திரன், புதன் நீச்சம்பெற்று இருந்தாலோ இந்தக் குணம் பெரும்பாலும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. 

அமாவாசையில் பிறந்தவர்களுக்கு இந்தக் குணம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. 6-ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்யும் காலங்களில் தனத்தையும் பொருட்களையும் உடைமைகளையும் இழக்கும் காலமாக எல்லோருக்கும் அமையும்.

மேற்சொன்னவாறு கிரக நிலைகள் இருப்பதினால் ஒருவருக்குக் கடைசிவரை இந்தக் குணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் மற்றவர்களது பொருளைத் தான் அபகரித்துக் கொண்டவர்களாக நிச்சயம் இருப்பார்கள். 

இதேபோல் தனது பொருட்களை, தனத்தை ஒரு காலகட்டத்தில் இழக்கவும் இதே கிரகங்கள்தான் உதவுகின்றன. ஒருவருடைய இழப்பு மற்றவர்களுக்கு சாதகமாகவும் இருக்க இறைவன் உதவுகின்றார் என்று சொல்லுவதைவிட இழந்த ஒருவனது பொருளை மற்றவன் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றான் என்பதை வேடிக்கை பார்ப்பதில் பகவான் மிகவும் விருப்பம் கொள்கிறார். 

இன்னும் ஒரு விதமாகக்கூடச் சொல்லலாம். ஒருவனுக்குச் சேர வேண்டிய பொருளை, தனத்தை மற்றவர்களுக்குப் பகவான் எப்படிச் சேர்க்கின்றார் என்பதும் வேடிக்கைதான். மற்றுமொரு விதமாகப் பார்த்தால், போன ஜென்மத்தில் ஒருவன் மற்றொருவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகை இந்த ஜென்மத்தில் அவனால் இழக்கச் செய்து மற்றவனுக்குக் கிடைக்கவும் பகவான் உதவுகின்றார்.

(கார்த்தவீர்யார்ஜுனன் - வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்)

திருட்டுக் குணம் உடையவர்களுக்குப் பரிகாரம் ஜோதிட ரீதியாகச் சொல்லப்படவில்லை. மற்றவர்களது அறிவுரைகளும் தனது அனுபவங்களுமே இவர்களது மனதினை மாற்ற இயலும்.

திருட்டு போன பொருள் திரும்பக் கிடைக்க வழி உள்ளதா? என்றால் கட்டாயம் உள்ளது. 

திருமாலின் சுதர்சன சக்கரம் திருமாலின் கட்டளையின்படி கார்த்தவீர்யார்ஜுனனாகப் பிறந்தது. 

கார்த்தவீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்லோகத்தை ஜெபிப்பதால் தன ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல் இருக்க உதவும். 

ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம:|

கார்த்த வீர்யார்ஜுனோ நமஹ

ராஜா பாஹு ஸஹஸ்ரவாந் |

தஸ்ய ஸமரந மாத்ரேனா

கதம் நஷ்டம் ச லப்யதே ||

கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்தால் அல்லது மேற்சொன்ன மந்திரத்தை 1008 முறை ஜெபித்தால் இழந்த பொருட்கள் நிச்சயம் திரும்பக் கிடைத்துவிடும்.

வீட்டில் திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சிரத்தையுடனும் ஜெபித்து வந்தால் உடன் பலன் கிடைக்கும். 

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள கார்த்தவீர்யார்ஜுனன் சிலையும் சிறப்பு வாய்ந்தது.

கடன் பிரச்னை நீங்க, தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்க, மரணபயம் நீங்க, நியாயமான வழக்குகளில் வெற்றி பெற, கல்வியில் சிறப்படைய என பக்தர்களின் பல்வேறு குறைகளை நீக்க பல்வேறு பூஜைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com