வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வைக் காண வேண்டுமா? முல்லை வனத்திற்கு வாங்க!

திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் மே 7-ம் தேதி மூலவருக்கு நிஜரூப தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. 
வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வைக் காண வேண்டுமா? முல்லை வனத்திற்கு வாங்க!


திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் மே 7-ம் தேதி மூலவருக்கு நிஜரூப தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. 

முல்லை வனம் எனப்படும், திருமுல்லைவாயலில் அமைந்துள்ளது மாசிலாமணீஸ்வரர் - கொடியிடை நாயகி அம்மன் கோயில். இறைவன் இக்கோயிலில் சுயம்பு லிங்கமாக தீண்டாதிருமேனியராக எழுந்தருளியுள்ளார். 

தொண்டமான் என்ற அரசன், முல்லை வனம் பகுதிக்கு வந்தபோது முல்லைக் கொடியில் யானையின் கால்கள் சிக்கின. தன் வாளால் முல்லை கொடி புதரை வெட்டிய போது அதிலிருந்து ரத்தம் பீரிட்டது. 

புதரை விலக்கிய போது அங்கிருந்த சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வழிவதைப் பார்த்த அரசன் அதிர்ச்சியடைந்து, அதே வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்ற போது, அரசன் முன் சிவபெருமான் தோன்றிக் காட்சியளித்தார். 

வெட்டுப்பட்ட சிவலிங்கமே கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான பாணம், சதுரபீட ஆவுடையார் ஆகும். அபிஷேகங்கள் ஆவுடையாருக்குத்தான் செய்யப்படுகின்றன. வாளால் வெட்டுப்பட்டதால், மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்துக்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும். 

தொண்டமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் இக்கோயிலில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோயில் வாசலை நோக்கி கிழக்கு பார்த்துத் திரும்பி உள்ளது. 

சித்திரை சதயம் அன்று இச்சம்பவம் நிகழ்ந்ததால் ஆண்டுதோறும் அன்றைய நாளில் மூலவருக்கு சந்தனக் காப்பு களைப்பட்டு, மீண்டும் சார்த்தப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வு இந்த வருடம் மே 7-ம் தேதி நடக்க உள்ளது. 

அடுத்த ஆண்டு சித்திரை சதயம் வரும் வரை அந்த சந்தனம் சுவாமி மீது அப்படியே இருக்கும். அபிஷேக காலங்களில் சந்தனத்தின் மீதே சந்தனம் சார்த்தப்படுகிறது. 

மே 9-ம் தேதி காலை 10.00 மணிக்கு சித்திரை, சதயம் நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு நடக்கிறது. இடைப்பட்ட நாளில் பக்தர்கள் நிஜரூப தரிசனம் காணலாம். அந்த சந்தனத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com