ஜோதிட பரிகாரங்களை எப்படி சரியான முறையில் அணுகுவது? 

ஜோதிட பரிகாரங்களை எப்படி சரியான முறையில் அணுகி அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 
ஜோதிட பரிகாரங்களை எப்படி சரியான முறையில் அணுகுவது? 

ஜோதிட பரிகாரங்களை எப்படி சரியான முறையில் அணுகி அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

நமக்கு வீட்டிலோ, தொழிலிலோ ஏதேனும் தொடர் பிரச்னைகள் ஏற்பட்டால், நமக்கு மட்டும் ஏன்? இப்படியெல்லாம் நடக்கிறது என்று நொந்துக்கொள்வதை விட அதை எப்படி சரிசெய்யலாம் என்று அமைதியாக யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். 

ஒரு சிலர் இந்த பிரச்னைக்கு எல்லாம் ஏதேனும் பரிகாரம் செய்யலாமா? ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா? என்று யோசித்து, ஒருவழியாக ஏதேனும் ஒரு ஜோதிடரை அணுகினால், உங்களுக்கு 4-ல் சனி, 5-ல் கேது உச்சம் நேரம் சரியில்லை அது, இது என்று நம்மை ஒருவழியாகப் பயமுறுத்தி..கடைசியில் இந்தப் பரிகாரம் செய்தால் ஓரளவுக்கு நன்மை நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்று சொல்லி முடிப்பார். 

நமக்கு இதெல்லாம் கேட்டு தலைச்சுற்றும். நமக்கு இருக்கின்ற வேலையில், இதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். ஏதோ நேரம் தான் சரியில்லை  போல அதற்காக தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். நமக்கு ஏற்படும் பிரச்னையை ஜோதிடர்கள் பணம் சம்பாதிப்பதில் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். 

எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு ஜோதிடர் பயமுறுத்தும் வகையில் பலன் சொன்னால் உடனடியாக அதை நம்பக்கூடாது. வேறு ஜோதிடரிடமும் சென்று கலந்து ஆலோசிக்க வேண்டும்.

எந்தப் பலனையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ள பழகிக் கொள்வது அவசியம். உதாரணமாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தற்போது ஜென்ம சனி நடைபெற்று வருகிறது. எந்த விஷயங்களிலும் சிறிது தடை தாமதம் ஏற்படலாம். எனவே எதைச் செய்தாலும் திட்டமிடல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை தளர விடாமை போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

7.30 பேருந்துக்கு 7.28க்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போய் பேருந்தை விட்டுவிட்டு, இதற்கெல்லாம் ஜென்ம சனி தான் காரணம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. 7.30 பேருந்துக்கு 7.15-க்கு பேருந்து நிறுத்தத்தில் இருப்பது அவசியம். சோம்பேறித்தனத்தை அறவே சனி பகவானுக்குப் பிடிக்காது.

ஜோதிடர்கள் சொல்வதை நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்தப் பெரிய பரிகாரத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இரண்டு முறை அலசி ஆராய்ந்து வேறு ஜோதிடரை கலந்து ஆலோசித்து எதிலும் இறங்குவது நல்லது.  

ஒருவருக்கு ஜாதகப்படி கிரகநிலை சஞ்சாரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் ஒருசில பிரச்னைகள் தோன்றி மறைவது இயல்பு. அதையெல்லாம் கண்டும் காணாது, இறைவனிடம் ஒப்படைத்துவிடுவது தான் நல்லது. நல்லது நினைத்தால், எப்போதும் நல்லதே நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வராத வரை நம் வாழ்வில் சிக்கல்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com