
அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதியை அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயனி, நாசிக் ஆகிய நகரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலாகாபாத்தில் பூரண கும்பமேளா நடைபெறுகிறது.
இது தவிர 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாக்களின்போது
பக்தர்கள் நதிகளில் புனித நீராடுவது வழக்கம்.
அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி ஆகிய மூன்றும் கூடும் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.
2019-ம் ஆண்டு ஜனவரி 14/15 மகரசங்கராந்தி முதல் மார்ச் 04-ம் தேதி மகாசிவராத்திரி வரை பக்தர்கள் புனித நீராடலாம் என்று அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பமேளாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.