வேலூர் ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் ஜூலை 1-ல் மஹா கும்பாபிஷேகம் 

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் 01.07.2018 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
வேலூர் ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் ஜூலை 1-ல் மஹா கும்பாபிஷேகம் 
Published on
Updated on
1 min read


வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் 01.07.2018 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

நிகழும் விளம்பி வருடம் ஆனி மாதம் 17-ம் தேதி 01.07.18 ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரம், திருதியை, அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கடக லக்னத்தில் ஸ்ரீ ஞானசித்திகணபதி, ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ ஞானசரஸ்வதி, ஸ்ரீ ஞானவள்ளி ஞானகுஞ்சரி சமேத ஸ்ரீ ஞானபண்டிதசுவாமி விமானம், ஸ்ரீ ஞானப்பூங்கோதை சமேத ஸ்ரீ ஞானகிரீச்வரர், குறமகள் தழுவிய குமரன் திருக்கோயில் விமானம் மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்விக்க திருவருள் துணைகொண்டு ஆவன செய்யப்பெற்றுள்ளது. 

முருகனடியார்கள், திருப்புகழ்ச் செல்வர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் இந்த மஹா கும்பாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருவருளைப்பெற அன்புடன் அழைக்கின்றோம். 

கோயில் அமைவிடம்: சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 14-வது கிலோ மீட்டரில் மங்கலம் என்ற ஊருக்கு அருகில் கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ளது.

சென்னை அரக்கோணம் - காட்பாடி ரயில் வழியில் சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com