
கோயில் நகரமான கும்பகோணம் டவுன் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி, உற்சவ அம்பாள்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்கள்.
அபிமுகேஸ்வரர் மற்றும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளாக வந்திருந்து, அம்மனைத் தரிசித்தும், கொலு பொம்மைகளை ரசித்தும் சென்றார்கள்.
- குடந்தை ப.சரவணன் - 9443171383
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.