வாஸ்துப்படி உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க இதைச் செய்து பாருங்களேன்! 

நாம் என்னதான் விழுந்து விழுந்து பணம் சம்பாதித்தாலும், அந்த பணம் நீண்ட காலம் நம் கையில்..
வாஸ்துப்படி உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க இதைச் செய்து பாருங்களேன்! 
Published on
Updated on
1 min read

நாம் என்னதான் விழுந்து விழுந்து பணம் சம்பாதித்தாலும், அந்த பணம் நீண்ட காலம் நம் கையில் தங்குவதில்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. 

இதற்கு என்ன காரணம் என்று முதலில் சிந்திக்க வேண்டும்? வாஸ்துப்படி நாம் குடியிருக்கும் வீட்டில் ஏதேனும் குறை இருக்குமோ? என்று ஆராய்ந்து பார்க்கலாம்.

பணத்தட்டுப்பாடு நீங்க வாஸ்துப்படி சரியான முறையைப் பின்பற்றினால் வாழ்வில் கட்டாயம் உயரலாம். அது என்னவென்று செய்து தான் பார்ப்போமே..

• வீட்டில் பணப்பற்றாக்குறையை போக்க ஒவ்வொரு வியாழனன்றும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர பணத்தட்டுப்பாடு நீங்கும். செல்வம் கொழிக்கும். 

• பணம் அதிகமாக கைமாறும் காரியம், அதாவது ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களுக்குச் செல்லும்போது சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். இந்த நிறத்தில் உடைகள் இல்லையெனில், இந்த நிறத்தில் இருக்கும் கைக்குட்டையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால், போன காரியம் உங்களுக்குக் கைகூடும். 

• பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்து உங்களைச் சேரும். 

• ஓடும் வெள்ளைக் குதிரை படம், ஜோடி கழுதைப் படம் அடிக்கடி பார்க்க பணம் அதிகமாக சேரும். 

• ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர தன ஆகர்ஷணமாகும். 

• வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். 

• உங்கள் வீட்டு கிழக்குப் பகுதியில் சில்லறைக் காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். பானை நிறைய சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் வைக்கவும். ஆனால், நீங்கள் வைக்கும் பானை எவருக்கும் தெரியாமல் இருந்தால் நன்று. 

இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. இதையெல்லாம் ஒருமுறை கடைப்பிடித்து தான் பாருங்களேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com