விநாயகர் சதுர்த்தியன்று எதற்காக களிமண் பிள்ளையாரை வைத்தோம் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியன்று எதற்காக களிமண் பிள்ளையாரை வைத்தோம் தெரியுமா?
Published on
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியன்று எதற்காக களிமண் பிள்ளையாரை வைப்பதன் தத்துவம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். 

உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த வஸ்துவால் பிடித்தீர்கள்....அவ்வாறு பிடிப்பதால், எந்த மாதிரி பலன் அமையும்? வாங்க பார்க்கலாம். 

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தைப் பெருக வைப்பார்

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்

14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

15 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார். 

எப்படி சொல்லப்பட்டிருந்தாலும், விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரைத்தான் பூஜையில் வைத்து வழிபடுகிறோம். எதனால் தெரியுமா? 

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு நாள் மண்ணிற்குள்தான் அடங்குவோம் என்னும் மிகப் பெரிய தத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தான் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, பூஜித்துவிட்டு, கடலிலோ, குளத்திலோ மண்ணோடு மண்ணாகக் கரைத்து விடுகிறோம். 

படிக்கும் குழந்தைகள், " சதுர்தீஸாய மான்யாய் ஸர்வ வித்யா ப்ரதாயினே வக்ர துண்டாய குப்ஜாய ஸ்ரீ கணேசாய மங்களம்" என்னும் ஸ்தோத்திரத்தைத் தினமும் கூறிவர பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com