இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று!

தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று!

2018 விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதியான நாளை பிறக்கிறது. திரயோதசி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் ரிஷப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது.

தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பானது. சித்திரை விஷூ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களைக் குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்துக் குறிக்கும் மாதத்தை சூரிய மாதம் என்றும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்துக் குறிக்கும் மாதம் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது.

இந்தத் தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு வரும் அனைத்து இடர்களில் இருந்தும் இறைவன் நம்மைக் காப்பான் என்பது ஐதீகம். 

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள் - குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க மக்கள் தயாராவார்கள்.

பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com