இனி திருமலை காத்திருப்பு அறைகளில் பொங்கலுடன் சட்னி விநியோகம்!

திருமலை காத்திருப்பு அறைகளில் பொங்கல் மற்றும் உப்புமா போன்ற சிற்றுண்டிகளுடன் சட்னி வழங்கும் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
இனி திருமலை காத்திருப்பு அறைகளில் பொங்கலுடன் சட்னி விநியோகம்!


திருமலை காத்திருப்பு அறைகளில் பொங்கல் மற்றும் உப்புமா போன்ற சிற்றுண்டிகளுடன் சட்னி வழங்கும் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும் அன்னதானம், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், பொங்கல், ரவை, சேமியா உப்புமா உள்ளிட்டவற்றை வழங்கும்போது அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும் என்று மாதந்தோறும் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன்படி, தமிழ வருடப் பிறப்பு சனிக்கிழமை இரவு முதல் பொங்கல் மற்றும் உப்புமாவுடன் வேர்க்கடலை சட்னி வழங்குவதை தொடங்கியுள்ளது. இதற்காகப் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் திருமலையில் மக்கள் அதிகமாகக் கூடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை துவங்கியுள்ளதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவஸ்தானம் விரைவில் நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com