ஆக. 30-இல் வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில்.
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில்.


சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி வாலாஜாபேட்டையில் பழைமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு விழா நடத்த கோயில் திருப்பணிக் குழுவினர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இதையொட்டி, காசி விஸ்வநாதர் கோயிலில் சபரிவார பாலாலய கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, பாலாலய பிரதி பிம்ப அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. 
தொடர்ந்து, ஐந்து நிலை ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என கோயில் திருப்பணிக் குழுவினர், நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொள்ள விரும்பினால் 98430 87991, 73583 16254 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com