பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பென்னாத்தூரில்..: கீழ்பென்னாத்தூரில் பழைமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரதோஷத்தையொட்டி, இக்கோயிலில் மூலவருக்கு பல்வேறு பூஜை பொருள்கள், வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இதேபோல, மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலத்தில்...: வேட்டவலம் அகத்தீஸ்வரர் கோயில் மூலவர் அகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள், பிரதோஷ நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, தண்டராம்பட்டு, செய்யாறு, கீழ்பென்னாத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com