பகவத்கீதையில் ஜோதிட கொள்கைகள், தடயங்களா!

பகவத்கீதை, வேதங்கள், உபநிஷத்துக்கள் இவற்றுள் ஆன்மிகம் மட்டும் அல்லாமல்
பகவத்கீதையில் ஜோதிட கொள்கைகள், தடயங்களா!

பகவத்கீதை, வேதங்கள், உபநிஷத்துக்கள் இவற்றுள் ஆன்மிகம் மட்டும் அல்லாமல் அதனைத் தவிர ஜோதிட சம்பந்தமான கோணத்திலும் இருப்பதனை நன்கு காணவே முடிகிறது. ஜோதிடம் அது தனிப் பாதையை அந்த புனித இதிகாசத்தில் இருக்கவே செய்கிறது. ஒவ்வொரு ஸ்லோகங்களிலும் அதனைக் கண்ணுறும் போது அதில் காணும் ஜோதிட கொள்கைகளையும் மற்றும் அதன் சம்பந்தமான தடயங்களையும் காணவே முடியும். 

இந்திய ஜோதிட அறிவியல் ஆராய்ச்சி கழக தேசிய தலைவர் திரு. சுக்லா அவர்களின் கட்டுரையில் கீதை ஸ்லோகங்களில் பொதிந்துள்ள ஜோதிடக் குறிப்புகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதனை விரிவாக இங்குக் காணலாம். இந்த கீதையில், அர்ஜுனர் பல கேள்விகளைப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்பதை நாம் அறிவோம். அதற்கு  பகவான் கிருஷ்ணரும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஒரு சமயம் பகவான் கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார். மேலும் அர்ஜுனனிடமிருந்து பதில் வரும் முன்னதாகவே, அவனிடம் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போவார் பகவான். அதற்கு காரணம் என்னவென்றால், பகவானின் கேள்விகளுக்கான விடை அவரின் வாய்மொழி  விஷயங்களிலேயே பொதிந்திருக்கும். 

பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தர்மத்திற்காக போராடினாலும், அவர்களுள் அர்ஜுனனை ஒரு தனிச் சிறப்பு அந்தஸ்து அளித்து தான் பார்த்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். வர இருக்கும் யுத்தத்தில் பார்த்தன், அர்ஜுனனின் பங்களிப்பை நன்கு உணர்ந்திருந்தார். ஒரு புறம் அவன் நன்கு போர்செய்வதில் வீரம் பொதிந்தவனாகவே இருந்த போதிலும் அவன் மனதளவில் மிகவும் வேதனையுடன் இருந்ததைப் பகவான் உணர்ந்தார். தர்மத்திற்காகத்தான் இந்த போர் நடைபெறப் போகிறது என்றாலும் அவனால் அதன் காரணங்களை தன்னால் சரியாக ஒத்துக்கொள்ள முடியவில்லை எனலாம். இந்தச் சூழலை தான் பகவான் சரியாகப் பயன்படுத்தி அர்ஜுனனுக்கு சரியான வழிமுறைகளைச் சிறந்த போதனையாக, கீதையைப் போதிக்கச் செய்தார். 

கீதையின் ஸ்லோகங்களில் உள்ள  ஒவ்வொரு வார்த்தைகளும், ஒவ்வொரு கிரகத்தைக் குறிப்பிடுவதாகவே இருக்கும். அப்படியே ஏதேனும் ஒரு முக்கியமான ஒரு கிரகம் விடுபட்டிருந்தால், அதனை ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலில் அது நிச்சயம் இடம் பிடித்திருக்கும். 

கீதையில் கூறப்பட்ட சில  வடமொழியில் உள்ள  வார்த்தைகளும் அதன் தகவல்களும்:-

KUTHASTVA - குதஸ்த்வ     
இதன் பொருள்:- அப்படிப்பட்ட ஒரு சிந்தனை / எண்ணம் / ஆர்வம்  சித்தரித்து எப்பொழுது வந்தது? இது புதன் சம்பந்தமான வார்த்தை !

KASHMALAM - கஷ்மலம் :-   மனவருத்தம் / மன அழுத்தம்
இதன் பொருள்:- தற்பொழுது வெளிப்படுத்தும் /  தேவையற்றுதுமான பந்தம் இது சந்திரன் சம்பந்தமான வார்த்தை!

VISHAME SAMUPASTHITAM - விஷமே சமுபஸ்திதம் 
இதன் பொருள்:- ஒரு கடினமான நேரம் /  ஒரு பொருத்தமற்ற நேரம் இது சனி சம்பந்தமான வார்த்தை ! ஏன் எனில் சனி நேரத்தைக் கட்டுப்படுத்துபவர் ஆவார். 

ANARYAJUSHTAM/NA ARYA JUSHTAM - அனார்யஜுஷ்டம் / ந ஆர்ய ஜுஷ்டம்
இதன்  பொருள்:-  ஆர்ய என்றால், உன்னத  /  நிபுணத்துவம் /  தகுதிவாய்ந்த / திறன் கொண்ட மனிதர். ஆனால், அனார்ய என்றால், மேலே கூறிய யாவும் அற்றவர் என்ற பொருள். தேர்ச்சி என்பது ஒரு கடின செயலால் உருவாவது. இது, செவ்வாய் சம்பந்தமான வார்த்தை. 

ASWARGYAM - அஸ்வர்கியாம் 
இதன் பொருள்:-  சொர்கத்துக்கு / வசதிகள் / ஆடம்பரங்கள், ஆகியவற்றுக்கு வழிவகுக்காது. இது சுக்கிரன் சம்பந்தமான வார்த்தை! 

AKIRTIKARAM - அகிர்த்திகரம்
இதன்  பொருள்:-  கீர்த்தி - புகழ் மற்றும் அதிர்ஷ்டம் இவற்றிற்கு எதிர்மறையானது / அவமதிப்புடன் / பாராட்டும்படி அல்லாத கீர்த்தி - புகழ் மற்றும் அதிர்ஷ்டம் இவை சூரியன் சம்பந்தமானது.

மேற்படி பகவத் கீதையில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ததில், இதில் ஒரு கிரகம் அதன் பெயர் காணாமல் போயுள்ளது அறியமுடிகிறது. ஆம் அது தான் குரு எனப்படும் வியாழன். இந்த வியாழன் என்பது குரு எனும் ஞானம் என்பதற்கு ஒரு இணைச் சொல்லாகவே விளங்குகிறது. இந்த ஞானம் அர்ஜுனனிடத்தில் இருந்திருந்தால் கீதை உபதேசம் என்பது தேவைப் படாமல் போய் இருக்கும். 

இத்தனைக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தனது தத்துவவாதியாகவும், குருவாகவும், வழிகாட்டுபவராகவும் நினைத்திருந்தாலும், அவரிடம் முழுமனதுடன், முழுமையாக அவரின் பாதத்தில் சரணாகதி அடையவில்லை. மேலும் மேலும் நிறைய அவன் மனதில் உதித்த அத்தனையையும் கேள்விக்கணைகளால் பகவானின் பாதத்தில் கொட்டி தீர்த்தான். இது அத்தனையும், 2 வது முதல் 18 வது அத்தியாயம் வரை தொடரவே செய்தது. இதில் அத்தியாயம் 11 ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபம் எனும் உலகளாவிய வடிவத்தைக் காண்பித்தும் அர்ஜுனனின் சந்தேகம் தொடரவே செய்தது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனின் ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் விட்டு விடவே இல்லை. அதனாலேயே, அர்ஜுனன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தமது குருவாகவே எண்ணி சரணாகதி அடையலானான். இங்கு குரு எனும் கிரகம் என்ற வார்த்தையும் நிறைவேறுகிறது. 

இந்த பகவத் கீதையின் வாயிலாக அர்ஜுனனுக்கு அந்த 6 கிரகங்களும் சாதகமாக இல்லாததாலும், குருவின் பங்களிப்பும் இல்லாததாலுமே அவனுக்கு அறியாமையின் காரணமாக இந்த கேள்விகள் சரமாரியாக எழுந்தது. பின்னர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எனும் குருவின் போதனைகளால், அர்ஜுனனின் சந்தேகம் மற்றும் திரிபுணர்ச்சி மெல்ல உருகி ஞானம் பெற்று அறிவொளி பெற்றான். இந்த தத்துவம் தான் ஜோதிடத்தின் பால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. 

இதனைப் பின்வரும் சிலரின் ஜாதகங்களில் ஒப்பீடு செய்து காணலாம் வாருங்கள்:- 

  விளக்கப்படம் 1 - ஆவுரங்கஜீப்  

எப்பொழுது குருவும், செவ்வாயும் நட்புடன் இருந்தும் மற்றும் அவைகள் கேந்திர, திரிகோணங்களில் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகருக்கு வீரம், திறமை இவற்றுடன் ஈடுசெய்யும் திறன் வழங்கப்பட்டிருக்கும். இவர் ஒரு முகலாயப் பேரரசர் ஆவார். இவர் ஏறத்தாழ 49 ஆண்டுகள் தெற்கு ஆசியாவை தனது கைப்பிடியில் வைத்து ஆட்சி செய்தவர். இவர் பல இந்து கோவில்களைப் பிடித்திருந்தாலும் இவரது காலத்தில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மது அருந்துதல், சூதாட்டம் போன்ற பலவித தவறான செயல்களைத் தடுத்தும் , ஒழித்தும் வைத்திருந்தார்.  

விளக்கப்படம் 2 - ராமகிருஷ்ண பரமஹம்சர்

எப்பொழுது குருவும், சந்திரனும் நட்புடன் இருந்தும் மற்றும் அவைகள் கேந்திர, திரிகோணங்களில் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகருக்கு தனது மனதை முழுமையாக கட்டுப்படுத்தும் திறன் அமைவதோடு, மேலும் இந்த உலக வாழ்வின் வலி /அழுத்தம் இவற்றை  புரிந்து கொண்டு அவற்றிலிருந்து விலகி, இறைவனிடத்தில் சரணாகதி அடைவதை செய்வித்ததால், அது நம்மை வியக்கவைக்கும்.   19 ஆம் நூற்றாண்டில் , வங்காளத்தில் வாழ்ந்த , காளி பக்தரான இவர் ஒரு பெரிய ஞானி. கல்வி மற்றும் மானுட சேவைகளுக்காக அவரின் சீடரான விவேகானந்தரின் மூலம் ராமகிருஷ்ண மிஷன் தோற்றுவிக்கப்பட்டது.                         

விளக்கப்படம் 3 - விநாயக் தாமோதர் சாவர்கர்

எப்பொழுது குருவும், புதனும்,  நட்புடன் இருந்தும் மற்றும் அவைகள் கேந்திர, திரிகோணங்களில் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகருக்கு மிகவும் நல்ல பகுப்பாய்வு திறன் நிச்சயம் இருக்கும். இவர்களின் உறவு சரியில்லாத போது, எதிர்மறையான விளைவு தான் நிச்சயம் சம்பவிக்கும். அது தான் இவருக்கு இருந்தது.  இவர் ஒரு சிறந்த புரட்சிகர சொற்பொழிவாளர். 

வெள்ளையனே இயக்கத்தில் இருந்தவர். இந்து மகாசபையின் தலைவராக இருந்தவர். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று செல்லுலர் ஸ்ரீலங்காவில் இருந்தவர். அமர் சித்ரா கதா எனும் குழந்தைகளுக்கான நகைச்சுவை புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். போர்ட் பிளேயர் ல் உள்ள ஒரு விமான நிலயத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன் 

- தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com